Posts

பிங்க்- நோ மீன்ஸ் நோ- வேண்டாம் என்றால் வேண்டாம்தான்

கொஞ்ச நாட்களுக்கு முன்னதாக உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். எஸ்.ரா எழுதுவதுபோல ஒரு உலர்ந்த துணியைப் போலத் துவண்டு கிடந்த ஒரு மதியத்தில், என்னால் கையாள முடியாத அளவில் ஒரு ஓய்வு கிடைத்தது. எதேதோ எண்ணியபடி இருந்த நேரத்தில் திடீரென  ரொம்ப நாட்களாக பார்க்க நினைத்துக் கொண்டிருந்த "பிங்க்" திரைப்படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். அதன் தொடர்ச்சியாக மருத்துவமனையில் இருந்த மூன்று நாட்களும் கிட்டத்தட்ட ஒரே ஜானரில் அமைந்த "தப்பட்", மிஸஸ், மீள் பார்வையாக த கிரேட் இந்தியன் கிச்சன் படங்களைப் பார்த்து முடித்தேன். அப்போது மனதில் தோன்றிய கேள்விதான் இது.  'வேண்டாம்', நோ .. இந்த சொற்களின் நிஜ அர்த்தம் என்ன? சொற்களுக்கு பொருளும் பயன்பாடும்தானே உண்டு? பாலினம் உண்டா? " நோ மீன்ஸ் நோ" என்பதை ஒரு தாரக மந்திரமென நாம் சொல்ல வேண்டிய கட்டாயத்தை சொல்லும் திரைப்படம். பெண்களை பின் தொடர்ந்து அவளை ஸ்டாக்கிங் செய்யும் ஆணின் நடத்தையை காதல் என்று நம் திரைப்படங்கள் மூலம் நினைத்துக் கொண்டிருக்கும் நமக்கு, "வேண்டாம்" என்று ஒரு பெண் சொல்வது "வே...

புத்தாயிரத்தின் ஒரு புதிய முயற்சி- 'சினேகிதியே'

மில்லினியம் எனப்படும் இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றில் முக்கியமான ஒரு புள்ளியாகக் கருதப்பட்டது. தொழில்நுட்பம், இசை, உலகமயமாதலின் விளைவுகள், அதன் காரணமாக ஏற்பட்ட தகவல் புரட்சி என நேரடியான மாறுதலை உலகம் எதிர் நோக்கிய வருடம் அது. அப்போதைய தமிழ்த் திரைப்படங்களுக்கு என்றொரு தனி 'டோன்' இருந்தது என்றே நான் நினைக்கிறேன். புதிய முயற்சிகள், பரிசோதனைகள், துள்ளலான இசை, உலகளாவிய கூறுகளின் தழுவல், எடிட்டிங், கலை என நாயகர்கள் தாண்டிய தொழில்நுட்பம் மீதான கவனம் என மாறுபட்ட ஒரு பரிமாணத்தை பார்க்க முடிந்தது என்பது என் அவதானிப்பு.  இந்த காலகட்டத்தில் நாங்களும் நிறைய திரைப்படங்கள் பார்த்தோம். பத்தாம் வகுப்பு விடுமுறையில், பல படங்களை இரண்டாம் காட்சியில் பார்த்திருக்கிறோம். அப்படிப் பார்த்த ஒரு படம் 'சினேகிதியே'. மிக நல்ல இயக்குநர்களின் ஒருவரான பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்த படம். முழுக்க முழுக்க பெண் கதாபாத்திரங்களே நடிக்க, பிரதான மைய நாயகிகளாக ஜோதிகாவும், சப்ராணி முகர்ஜியும், முரட்டு போலீஸ் அதிகாரியாக தபுவும்  நடித்த இந்தத் திரைப்படத்தில், சில நிமிடங்களே வரக்கூடிய ஒரு ஆண் பாத்திரம் உண்டு. பெண...

மனதை உறுத்தும் மோகமுள் - தி ஜானகிராமன்

தஞ்சாவூர்....இந்தப் பெயரைக் கேட்கும்போதெல்லாம் மனதில் அடுக்கடுக்காக நினைவலைகள் எழும்பும். பெரிய கோவில், பரந்து கிடக்கும் கோவில் வளாகம், பிரமிக்க வைக்கும் சிற்பங்கள், சோழர் வரலாறு, சரஸ்வதி மஹால் நூலகம், சித்திரா பௌர்ணமி, புராதனமான பல கட்டுமானங்கள், பொன்னியின் செல்வன், குந்தவை, நந்தினி, மிக மிக விஸ்தாரமான ஆலயங்கள்... சிறு வயதில் இருந்தே தஞ்சை மனதுக்கு மிகவும் நெருக்கமான ஊர். பயணம் செய்ய ஒரு நல்ல வாகனம் கிடைத்துவிட்டால் போதும். தஞ்சை, கும்பகோணம், தாராசுரம், தரங்கம்பாடி, பூம்புகார், வேளாங்கண்ணி என மனம் போன போக்கில் சென்றுகொண்டே இருக்கலாம். கோயில்கள், கோட்டைகள், கடற்கரைகள், நெல்வயல்கள் என கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும் அற்புதமான நிலப்பரப்பு.  எல்லாவற்றுக்கும் மேலாக காவிரி...கல்லணையில் ஐந்தாகப் பிரிந்து டெல்டா பகுதிகளை வளப்படுத்தும் காவிரியும், துணை ஆறுகளும். நினைவு தெரிந்து, என் ஐந்தாம் வகுப்பில் இருந்தே அடிக்கடி பயணம் செய்த பிரதேசம் தஞ்சைப் பகுதிதான். கன்னியாகுமரிக்குப் போன பிறகு, தஞ்சை செல்லும் வாய்ப்பு ஏனோ ஏற்படவில்லை. கிடைத்த ஒரு இடைவெளியில், ஒரு குட்டிப் பயணம் கிளம்பினோம...

தி கிரேட் இந்தியன் கிச்சன் - கண்ணுக்கு புலப்படாத சங்கிலிகள்

எனக்கு சாப்பிடுவது ரொம்பப் பிடிக்கும். அம்மா ரொம்ப நன்றாக சமைப்பார். புளிக்குழம்பு, சந்தவை, ஆப்பம், புளிச்சக்கீரை கடைசல் தொடங்கி அசைவ உணவுகள் அனைத்தையும் மிக நன்றாக செய்வார். ஒரு வெண்பொங்கலும் தேங்காய்த் தொக்கும் செய்தாலே அமிர்தமாக இருக்கும். எனக்கும் சமைப்பது பிடிக்கும். ருசியான வெரைட்டியான உணவுககளை செய்வது என் விருப்பமான ஸ்டிரெஸ் பஸ்டர். ஆனால், சமைப்பது என்பதும் வீட்டின் வேலைகளும் எத்தனை உடல் உழைப்பைக் கோருபவை எனபதை உணரத் தொடங்கிய பின்னர் அம்மா சமையலை சிலாகிப்பது குறித்த என் பார்வை பெரிதும் மாறியது.  கிராம வாழ்வில் சமத்துவம் இருக்கும், பால்யம் அழகானது, இப்பல்லாம் யாரு சாதி பாக்கறா என்பது போன்ற ஒரு மகத்தான பொய் தான் சமைப்பதும் வீட்டுவேலைகளும் நல்ல பெண்ணுக்கான கடமை என்பதும். ஆதிகால தாய் வழி சமூகத்தில் இருந்து தந்தை வழி சமூகமாக நாம் மாறும் போது வீட்டின் பொறுப்பு பெண்ணுக்கானதாக மாறியது. எளிமையாக இருந்த வீடு மாறியதைப் போல  காலம் மாற மாற உணவின் வகைகளிலும் வீட்டு பராமரிப்பிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. நீண்டு போகும் வேலைகளை முடித்துவிட்டு, பத்து மணிக்கு மேல் காலை உணவை வேகம...

சில்ரன் ஆஃப் ஹெவன் - பால்யத்தின் தீரா ஓட்டம்

உலக அளவில் மிக முக்கியமான திரைப்படங்கள் குறித்து எழுதப்படும் எந்த பட்டியலிலும் "சில்ரன் ஆஃப் ஹெவன்" நிச்சயம் இருக்கும். எனக்கு ஒரு இருவது ஆண்டுகளுக்கு முன்பு வரை உலக சினிமாக்கள் குறித்தும், வாழ்வைப் பேசும் அற்புதமான திரைப்படங்கள் குறித்தும் எதுவும் தெரியாது. இத்தனைக்கும் மிக அதிகமாக திரைப்படங்கள் பார்ப்பவர்களாகவே நாங்கள் இருந்தோம். கிட்டத்தட்ட வெளியாகும் எல்லாப் படங்களையும் தியேட்டரிலோ, வீட்டில் கேசட் அல்லது சிடியிலோ பார்த்து விடுவோம். குழந்தைகள் பார்க்கலாமா கூடாதா என்னும் அளவிலான சிந்தனைகள் இன்றியே "வெகுஜன படங்கள்" என்று சொல்லப்படும் பல கதாநாயக மையத் திரைப்படங்களைப் பார்த்து இருக்கிறோம். 'தண்ணீர் தண்ணீர்', 'வீடு', 'ஏர்முனை' போன்ற படங்கள் இயல்பிலேயே மாறுபட்ட கதையோட்டம் கொண்டு இருந்ததை என்னால் உணர முடிந்தது. அப்போது அதில் பெரிய வித்தியாசம் எதுவும் தோன்றவில்லை. அந்தக் காட்சியமைப்பே மனதில் பாரத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.  மிகத் தீவிரமாக புத்தக வாசிப்பைக் கைக்கொண்டிருந்த எனக்கு, திரைப்படங்கள் குடும்பத்தோடும், நண்பர்களோடும் பொழுது போக்கத் தேவைப்ப...

ஒளிரும் இயற்கை

ஒளி என்பது எப்போதுமே நமக்கு மிகுந்த மலர்ச்சியைத் தருவது. ஆதி மனிதனின் காலம் சூரியனால் வரையறுக்கப்பட்ட ஒன்றாக இருந்திருக்கும். இரவு என்பது நிலவும் நட்சத்திரங்களும். கால சுழற்சியில் நெருப்பைக் கண்டறிந்த போது, அதன் சுடும் தன்மையோடு ஒளிரும் தன்மையும் மனிதருக்கு பெரும் உதவியாகவே இருந்திருக்கலாம். காலப்போக்கில் ஒளியை நாமே கையாளத் தெரிந்துகொண்டாலும், தீபமோ மெழுகுவத்தியோ ஏற்றி எங்கும் நிறைந்திருக்கும் இறையை ஒளி வடிவமாக வணங்குவதும் நம் வழக்கமாக இருக்கிறது. அதன் காரணமாகவே, எத்தனையோ காரணங்கள் இருந்தும், ஒளியை பல நிறங்களில் அள்ளி வீசும் பட்டாசுகள் இன்று வரை நமக்கு தேவைப்படுகின்றன போலும்.  தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை நான் நிறுத்தி 22 வருடங்கள் ஆகி விட்டன. எட்டாம் வகுப்பு படிக்கும்போது, குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து நான் எழுதிய ஒரு கவிதை (!) கவிஞர் பொன்மணி வைரமுத்து அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பெண்மணி இன்னும் இதழில் பிரசுரமானது. தார்மீக ரீதியாக அதன்பிறகு பட்டாசு வெடிப்பது தவறு என்று எனக்குத் தோன்றியதால், அப்போதே அதில் விருப்பம் அற்றுப்போனது. பிள்ளைகள் வளரும்போது இருவருமே, சூழல் குறித்தும்...

தேய்பிறை

பிறைச்சந்திரன் வடிவில் இருந்த மேஜைக்குபின்னே நாங்கள் - கமலி மேடம் நடுவிலும் நானும் பேச்சியும் இடது வலதாக அமர்ந்திருந்தோம். முக்கியமான வேலைகளை எங்கள் முவருக்கும் தனித்தனியாகவோ கூட்டாகவோ தருவது எங்கள் ஆட்சியரின் வழக்கம்.  மாவட்டத்துக்கு பல திட்டங்களின் கீழ் வரப்பெறும் தையல் மெஷின்களை ஒருங்கே  தகுதியான நபர்களுக்கு தருவதற்காக ஒரு நேர்காணல் குழுவை அமைத்து எங்களை நியமித்திருந்தார அவர். கமலி மேடத்தின் அறையிலேயே அந்த தேர்ந்தெடுக்கும் வேலையை வைத்துக்கொள்ளலாம் என்று நாங்கள் முடிவு செய்ததன் விளைவாக இப்போது இங்கே அமர்ந்திருக்கிறோம். ஒரு நேர்காணல் அறையை போலத்தான் இப்போது இந்த அமைப்பு இருக்கிறதா என்று எனக்கு நினைக்கத் தோன்றியது.  அறைக்கு இந்த ஹாப் ஒயிட் கலர் மிகவும் பாந்தமாக பொருந்தி இருந்தது.  அதேபோல ஆழ்ந்த பச்சை திரைச்சீலையும்.  தகுதியான நபர்கள் என்பது தையல் மெசின்களை பெறுவதற்குத் தகுதியான பெண்களைக் குறிக்கிறது. வாழ்வில் போதுமான தகுதிகளை பெறவில்லை என்று சமூகமும் குடும்பமும் கைகழுவிவிட்ட பெண்கள் இவர்கள். கணவனால் கைவிடப்பட்டு, கைம்பெண்ணாகி,எதேனும் நோயால் பாதிக்கப்பட்டு, பொருள...