நானாக நான் வாழ்தல் - சிவசங்கரியின் படைப்புகள்
சிவசங்கரி தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். எழுத்தோடு சேர்ந்து சமூகப் பணிகளிலும் மிகுந்த அக்கறை கொண்டவர். எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். நாவல்கள், பயணக் கட்டுரைகள், சிறுகதைகளோடு, சுய முன்னேற்ற புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். தனி மனித வக்கிரங்கள், துயரங்கள், முயற்சிகள், குடும்பங்களின் உள்ளே நிகழும் துரோகம், ஏமாற்றம் அனைத்தையும், மிக ஆழமான மொழியில் எழுதியவர். இவற்றோடு என்னை மிகவும் ஆச்சர்யபடுத்துவது அவரது சமூக ஈடுபாடும், தொலைநோக்குப் பார்வையும். ராஜீவ் காந்தியுடனான் தன் பயணங்களையும் அவர் எழுதி இருக்கிறார். பத்ம ஶி விருது பெற்றவர். போதை மருந்து, குடிநோய் குறித்து மிகவும் விரிவாகவும் அது எப்படி ஒரு மனிதனின் வாழ்வை அழிக்கிறது என்பதையும் முதலில் எழுதியவர் சிவசங்கரியாகவே இருக்கக்கூடும். குடி நோயாளிகள் மறுவாழ்வுக்காக "அக்னி" என்ற அமைப்பையும் நிறுவியவர். புற்றுநோய் குறித்து அவ்வளவாக யாரும் அறியாத காலத்திலேயே அதன் கொடுமையையும் வலியையும் "நண்டு" நாவல் மூலம் எழுதியவர். அவரது நாவல்கள் திரைப்படங்களாகவும் தொலைக்காட்சி தொடர்களாகவும் வெளிவந்துள்ளன. படிப்...